October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKஅரசு – கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை தீர்மானம்

by Satheesa
August 18, 2026
in News
A A
0
TVKஅரசு – கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை தீர்மானம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கிராம மக்களின் குரல்வளையை நெறிக்கும் தமிழக வெற்றிக்கழக அரசு – கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் கூறுவதை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி..

கிராமசபை கூட்டம் என்பது கிராமத்தின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை அந்தந்த கிராம மக்களே ஒன்றுகூடி நேரில் பேசி முடிவு செய்யும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக கொண்டு செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் வருடத்திற்கு நான்கு முதல் ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சுதந்திர திருநாள் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராம சபைக்கூட்டத்தில் கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனை தீர்மானமாக நிறைவேற்றக்கூடாது எனவும், அரசாங்கம் கூறியுள்ள 15 கருத்துக்களை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் ஏ டி பஞ்சாயத்து எனப்படும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது‌.

குறிப்பாக கிராம மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சனை, டாஸ்மாக் இடமாற்றம் செய்ய வேண்டும், ஓஎன்ஜிசி எண்ணைய் குழாயை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற கூடாது எனவும் அரசுக்கு எதிராக எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது எனவும் ஊராட்சி செயலாளர்களுக்கு ஏடி பஞ்சாயத்து மூலம் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிராம மக்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் அறிந்து அதனை செயல்படுத்த ஜனநாயக முறையில் அமைக்கப்பட்டுள்ள கிராம சபை கூட்டத்தையும், தமிழக வெற்றிக் கழக அரசு மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு முறைகேடான வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் நேற்று மாலையே அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் இது தொடர்பாக ஆடியோ அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரமேஷ் பாபு என்பவரிடம் விளக்கம் கேட்ட பலமுறை முயற்சித்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்

Next Post

திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரை  அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சம்பவம்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
கரூர் வழக்கு : நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலருக்கு நிபந்தனை ஜாமீன்

October 27, 2025
விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்லத் தடையா ? – டிஜிசிஏ ஆய்வு

October 23, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.