• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்

by Satheesa
November 17, 2026
in News, News
0
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரியில் காவிரியின் இரண்டு பக்க கரைகளிலும் சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம். காவிரியில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்து சேராத நிலையில் நகராட்சியால் அமைக்கப்பட்ட போர்வெல் வாட்டரில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாடுதுறை ஆதினம், தருமபுர ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் புனித நீராட முடியாததால் வேதனை:-

கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி தனது பாவச்சுமை நீங்க சிவபெருமானிடம் வேண்டிய போது மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடிசிவனை வேண்டி விமோசனம் பெற கங்கைக்கு சிவபெருமான் அருளியதால் கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இந்த ஐதீகத்தை போற்றும் வகையில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றை மையப்படுத்தி காவிரி துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஐப்பசி ஒன்றாம் தேதி தேதி முதல் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. பத்து நாள் உற்சவமாக சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் காவிரியில் தண்ணீர் இல்லாததால் பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட வழக்கு தொடுத்தார். இன்று கடை முக தீர்த்தவாரி உற்சவத்திற்கு தண்ணீர் உரிய நேரத்தில் வந்து சேரும் என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேரவில்லை. மயிலாடுதுறை நகராட்சி சார்பில் காவிரியில் போர்வெல் வாட்டர் மூலம் குழாய் அமைத்து பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் போதிய தண்ணீர் திறக்காததால் போர்வெல் வாட்டரில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீஅபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயங்களில் இருந்து காவிரியின் இரண்டு பக்க கரைகளிலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். காவிரியில் அஸ்திரதேவர்களுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளின் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அமபலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள்,, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் போர்வெல் வாட்டரில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில் காவிரி படித்துறை மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களின் தரிசனத்திற்காக காட்சி தரும். இன்று இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியின் இரண்டு கறைகளிலும் தீர்த்தவாரி கொடுத்த பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

ராணிப்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் ஒப்பந்தம் கூடிய விரைவில் முடியப்போகிறது அமைச்சர் அருண் ராஜ் பேட்டி

Next Post

இளம் பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ள காதலனை கைது

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நாகை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரம் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத விரதமாலை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

கார்த்திகை முதல் நாள் -ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

திருவண்ணாமலை திருப்புடை உபய யாத்திரை வள்ளி தெய்வானை பாலசுப்பிரமணி திருக்கல்யாணம்

November 17, 2026
Next Post
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்

இளம் பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ள காதலனை கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நாகை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரம் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத விரதமாலை

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6