கார்த்திகை முதல் நாள் -ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்கத் தயாராகும் பக்தர்கள், குருசாமி முன்னிலையில் துளசி மணி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து, 41 நாட்கள் மண்டல விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.கார்த்திகை முதல் நாள் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் காலையிலேயே ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. இன்று (நவம்பர் 17) அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.நடப்பு சீசனில் டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜையும், 2027 ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு மற்றும் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளன.இதையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து, பக்தி பரவசத்துடன் விரதத்தைத் தொடங்கினர்.







