காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் திருவண்ணாமலை திருப்புடை உபய யாத்திரை வள்ளி தெய்வானை பாலசுப்பிரமணி திருக்கல்யாணம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது வள்ளி தெய்வானை பாலசுப்பிரமணியம் திருக்கல்யாணத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர் இதில் முருகனுக்கு பால் நெய் தயிர் விபூதி சந்தனம் ஆகியவற்றில் முருகனுக்கு பூஜை செய்து அலங்காரம் செய்தனர் இக்கோயிலில் 13 வருடமாக நடைபெற்ற நிலையில் இக்கோவிலில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த தெய்வம் என்றும் அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசித்து வந்தால் அவரது குடும்பத்தில் சகல செல்வமும் சகல சௌபாக்கியமும் அமைந்து விடும் என்றும் அங்காள பரமேஸ்வரி கோவில் பூசாரி திரு கபாலி அவர்கள் தெரிவித்தார் மேலும் இக்கோவில் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்திற்கு ஏராளமான பொது மக்களுக்கும் அதிமுக ஸ்ரீபெரும்புதூர் நகரச் செயலாளர் போந்தூர் மோகன் மற்றும் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் தகவல் தொழில் நுட்ப பிரிவு வி ஆர் எஸ் ஸ்ரீதர் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்







