ராணிப்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் ஒப்பந்தம் கூடிய விரைவில் முடியப்போகிறது – மருத்துவம் & மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண் ராஜ் பேட்டி..
ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மரபனு ஆராய்ச்சி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சி.எம்.சி மருத்துவமனை இயக்குனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் & மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் கூட்டுறவு துறை அமைச்சர் காந்தி ராஜ், ஆற்காடு, வேலூர், ராணிப்பேட்டை, சோளிங்கர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் & மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண் ராஜ்:-தமிழ் நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ் நாடு மாநில முதலமைச்சர் விஜய் தலைமையில் மருத்துவ துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மருத்துவம் & மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண் ராஜ் கூறுகையில் மரபணு ஆராய்ச்சி சிறுவயதிலேயே துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு மருந்துகள் எந்த அளவிற்கு கொடுக்கலாம் என்று இதன் மூலம் கண்டறிய முடியும். கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் நாம் வெளியிட்டு இருந்தோம். 52 அறிவிப்புகள் 9.2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கேட்பது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எப்பொழுது அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வரும் என்று. நிச்சயமாக ஒரு அறிவிப்பு வரும்.
108 ஆம்புலன்ஸ் ஒப்பந்தம் கூடிய விரைவில் முடியப்போகிறது. மேலும் புதிதாக ஒப்பந்தம் விட்ட பிறகு மேம்பட்ட ஆம்புலன்ஸ் சேவை உறுதி செய்யப்படும்.என்று கூறினார்
பேட்டி:அருண்ராஜ் (சுகாதாரத்துறை அமைச்சர்)







