வேலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வருகை – அரசு மருத்துவமனையில் வெள்ளையடிப்பு நாடகம், ஆம்புலன்ஸ் நிறுத்த கூட இடமின்றி அமைச்சர், அதிகாரிகள் வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதாக நோயாளிகள் குற்றச்சாட்டு.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிய வந்திருந்தார். அமைச்சரின் வருகையை ஒட்டி அவசர அவசரமாக அடுக்கம்பாறை உள்ள அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடிக்கும் பணி மற்றும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. வழக்கமாக இருக்கும் நிலை மாறி இன்று மட்டும் சுத்தமாக இருப்பது போல் காட்டுவதற்காக இந்த பணி மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்த நோயாளிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.இதேபோல் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.3.94 கோடி மதிப்பிலான புதிய சிடி ஸ்கேன் இயந்திர மையத்தை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத் கண்ணா, சுதாகர், சிந்து, தென்றல் குமார், வேலழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகள் வார்டில் அமைச்சர் அருண்ராஜ் தங்க மோதிரம் வழங்கிய போது, த.வெ.க கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் கூட்டம் உள்ளே சென்றதால் குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் வேதனைமேலும் அமைச்சர் நிகழ்ச்சிக்காக உள்ளே சென்றிருந்த போது, அமைச்சரின் வாகனங்கள் எம்எல்ஏக்கள் வாகனங்கள், மாவட்ட ஆட்சியரின் வாகனங்கள், கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் நோயாளிகளை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மிகவும் சிரமமடைந்தனர்.அதேபோல் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு இடையூறாக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]







