விழுப்புரத்தில் சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து 24 மணி நேரமும் அனைத்து விதமான சிகிச்சையளிக்கும் மருத்துவ வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
பேட்டி 1) மருத்துவர் வெற்றிச்செல்வன்(காவேரி மருத்துவமனை)
விழுப்புரம் மரகதம்(தனியார்) மருத்துவமனையுடன், சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகங்கள் இணைந்து பொதுமக்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளையும் விழுப்புரத்தில் அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த மருத்துவசேவை தொடக்கம் இன்று விழுப்புரம் மரகதம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ ஆலோசகரும், மருத்துவருமான வெற்றிச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் உரிய நேரத்தில்சென்றடையவேண்டும் என்ற ஒரே நோக்கில், இரு மருந்துமனை நிர்வாகங்கள் இணைத்து மருத்துவ சேவையை விழுப்புரத்தில் தொடங்கியுள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள், தீவிர சிகிச்சை மற்றும் அவசர கால மருத்துவ சேவைகளை பெற 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு செல்கின்றனர். தற்போது இந்த சேவைகளை விழுப்புரத்திலேயே பெறலாம். உரிய நேரத்தில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கான ஏற்பாடுகள் மரகதம் மருத்துவமனையில்செய்யப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களும், பயிற்சி பெற்ற செவிலியர்கள் ஐ.சி.யூ ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் விழுப்புரத்தில் தங்கி மருத்துவ சேவைகளை அளிப்பார்கள். விழுப்புரம் மாவட்டத்தை ச்சேர்ந்த மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர். இந்நிகழ்ச்சியில், 24 மணி நேரமும் செயல்படும் அவசர ஊர்தி சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மரகதம் மருத்துவமனை மருத்துவர் கே.டி. திலீபன், காவேரி மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் கிளைவ் பெர்னாண்டஸ், மருத்துவ மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவரும் மருத்துவருமான வீரபாகு மற்றும் மருத்துவர்கள், கலந்துகொண்டனர்.







