பேரணாம்பட்டு அருகே முள் புதாரில் கிடந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை ரேஷன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்திச் செல்லும் வாகனங்களை சோதனை சாவடியில் சோதனை செய்யாமல் அனுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி, தாஹிர் வீதி அருகில் உள்ள முல்புதாரில் 17 அரிசி மூட்டைகள் இருப்பதாக பேர்ணாம்பட்டு காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர்மர்ம நபர் முள் புதாரின் பதுக்கி வைத்திருந்த 17 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர் பேரணாம்பட்டு காவல் துறையினர் முன்புதாரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பேரணாம்பட்டு பகுதியில் ரேஷன் கடைகளில் கள்ள சந்தையில் வாங்கி ஆந்திரா கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்வதாக தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கும் மற்றும் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் இருக்கும் காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்யாமல் அனுப்புவதால் ரேஷன் அரிசி கடத்துவது தொடர்கதையாகவே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் எ
முள் புதாரின் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.







