இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் – தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் இசை இட்டதோடு, இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று உலகளவில் பெருமை சேர்த்தவர். மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் கால்பதித்தவர்.
தற்போது, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி, ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் விளம்பரப்பணிகளில் ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளார்.
அந்தச் சூழலில், ஒரு பிரபல தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற ரஹ்மானை, தொகுப்பாளர் “பெரிய பாய்” என அழைத்தார். உடனே சிரித்த ரஹ்மான்,
“பெரிய பாய், சின்ன பாய்-nu நான் என்ன கசாப்புக்கடை வச்சிருக்கேனா? இது என்னால ஏற்க முடியல. இப்படிச் சொல்லக் கூடாது,”
என்று நேரடியாக பதில் அளித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை ரசிகர்கள் “சின்ன பாய்” என்றும், ரஹ்மானை “பெரிய பாய்” என்றும் பாசமாக அழைப்பது வழக்கம்தான். ஆனால் ரஹ்மானின் இந்த பதில், அவரது நேர்மையான அபிப்பிராயத்தை சுட்டிக்காட்டுகிறது.