ஆஸ்கர் விருது பெற்ற பின்னர், வந்த சில முக்கியமான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.
ஒரு சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், இந்திய இசையை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்ற லட்சியம் தன்னிடம் இருந்ததாகவும், ஆனால், ஆஸ்கர் வென்ற பிறகு அவர் ஓய்வெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால்தான், அக்காலத்தில் வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டதாக கூறினார். அவ்வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால், இந்திய இசையின் வரம்புகள் இன்னும் பரவலாக இருந்திருக்கும் என்ற வருத்தமும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியர் அல்லாத இசை ரசிகர்களை எட்டும் விதமாக, இந்திய இசையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே இன்றைய காலத்திலான அவசியம் என்றும் அவர் கூறினார். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு வெறும் மூன்று வாரங்களில் இசையமைத்து முடித்ததாகவும், அந்தப் படத்திற்கு ஆஸ்கர் கிடைத்தபின், ‘ரோஜா‘ படத்தைத் தொடர்ந்து கிடைத்த வரவேற்பு நினைவுக்கு வந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.