மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் வெப்பம் மிகுந்த நிலையில், இன்று மாலை திடீரென்று காற்றுடன் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை குத்தாலம், மங்கைநல்லூர் செம்பனார்கோவில்,திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. காற்று காரணமாக மயிலாடுதுறையில் நகரின் பல்வேறு இடங்களில் பழமையான மரங்கள் வேருடன் கீழே சாய்ந்தது. மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் 50 ஆண்டுகளுக்கு மேலான மரம் வேரோடு சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை தூண்டித்து ஜேசிபி இயந்திரம் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உதவியுடன் மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்துகளில் பொதுமக்கள் காயம் இன்றி தப்பினர்.













