திமுக ஆட்சியில் நந்தன் கால்வாய் திட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என பொத்தாம் பொதுவாக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவிப்பது கண்டனத்துகுரியது – நிலம் கையகப்படுத்த ரூ.42.69 கோடி ஒதுக்கீடு செய்தது திமுக என முன்னாள் விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ அன்னியூர் தெரிவித்துள்ளார்.
பேட்டி – அன்னியூர் சிவா (திமுக, விக்கிரவாண்டி முன்னாள் எம் எல் ஏ)
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரவாண்டி முன்னாள் எம் எல் ஏ அன்னியூர் சிவா தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ந.ந்தன் கால்வாய் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு பணிகள் நடைபெறவில்லை என பொத்தாம் பொதுவாக கூறி குற்றஞ்சாட்டுவது கண்டனத்துக்குரியது என தெரிவித்த அவர் திமுக ஆட்சியில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு தனியார் நிலம் எடுப்பதற்கு அரசானை வெளியிடப்பட்டு அதற்காக 42 கோடி 69 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு நிலம் கையகபடுத்தபட்டு வருவதாக தெரிவித்தார். நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டுமென தொடர்ந்து திமுக ஆட்சியில் வலியுறுத்தப்பட்டு சாத்தனூர் அனையின் நீரை ஊட்டு கால்வாய் அமைத்து நந்தன் கால்வாய்க்கு கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தி நிதி ஒதுக்கீடு செய்யபட்டதாகவும், இத்திட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும் பயன் பெறும் என கூறினார். மேலும் பெஞ்சல் புயலால் விக்கிரவாண்டி தொகுதியில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்படைந்ததால் அதனை சீரமைக்க 75 கோடி நிதி ஒதுக்கீடு திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.













