மயிலாடுதுறை டி.எஸ்.பி தனிப்படை போலீசார் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. மொத்த வியாபாரி கைது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே மயிலாடுதுறை டி.எஸ்.பி தனிப்படை போலீசார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமை காவலர்கள் மூர்த்தி, மனோகர், பிரபாகர், மதன் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு முட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் குட்கா கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் புதுக்கோட்டை அம்மன் பட்டினத்தை சேர்ந்த இப்ராஹிம் (60) என்பதும் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் தங்கி மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து தனிப்படை போலீசார் கும்பகோணம் கிடங்கில் நடத்திய சோதனையில் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராஹீமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.













