மயிலாடுதுறையில் ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளில், சிறுமிகளை அம்மன் போல் அலங்கரித்து தூப தீபம் காட்டி சிறப்பு வழிபாடு, புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு செந்தூர காப்பு அலங்காரம் செய்து வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு :-
ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மங்கள வராகி அம்மனுக்கு ஆறாம் நாளான இன்று பால் பன்னீர் மஞ்சள் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து அம்மனுக்கு செந்தூர காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. முன்னதாக சிறுமிகளை அம்மன் போல் அலங்காரம் செய்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர், இதனை அடுத்து குழந்தைகளை அம்மனாக பாவித்து தீப தூபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்து கன்னியா பூஜை நடைபெற்றது. தர்மபுரம் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.













