பொதுவாக விடுமுறை நாட்கள் வந்துவிட்டாலே எல்லாருக்கும் முதல்ல தோன்றது எங்காவது டூர் போகனுன்னு தான் இருக்கும். அதிலும், இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு செல்வது என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். இப்படி மலையேற்றப் பகுதிகளுக்கு செல்ல விரும்புவோர்களின் ஆசையை நிறைவேற்றவே தமிழ்நாடு அரசு ட்ரெக் தமிழ்நாடு என்ற தனித்துவமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்போ, இந்த திட்டத்தின் சிறப்புகள் என்ன? எந்தெந்த பகுதிகளுக்கு ட்ரெக்கிங் செல்லலாம்? யாரெல்லாம் செல்லலாம்? என்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில இருக்க மலைப்பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய பெரும்பாலும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் ட்ரெக்கிங் செல்லும் பல பேர் காடுகள் மற்றும் வனப் பகுதிகளில் திசை தெரியாமல் சிக்கிக் தவிக்கிறாங்க. ஆனால், இனி அந்த கவலையே வேணாம்.
ஏன் அப்படின்னா , மலையேற விரும்புவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, தமிழ்நாடு அரசு (ட்ரெக் தமிழ்நாடு) என்ற அற்புதமான திட்டத்தை அறிமுகம் செஞ்சி இருக்காங்க… இந்த திட்டம் மூலம், தமிழ்நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுது…
ட்ரெக்கிங் போகும்போது காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட அனுபவம் வாய்ந்த மலையேற்ற வழிகாட்டிகள் உங்க கூட வருவாங்க…
ட்ரெக்கிங் போறவங்களுக்கு, மலையேற்றக் காலணி, சீருடைகள், முதுகுப்பை, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தொப்பி, தண்ணீர் குடுவை, மலையேற்றக் கோல், விசில், திசைக்காட்டி, வெந்நீர் குடுவை, தகவல் தொடர்பு சாதனங்கள் எல்லாம் கொடுப்பாங்க…
நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி , திண்டுக்கல், விருதுநகர், மதுரை,கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் & திருவள்ளூர் போன்ற மாவட்ட்டங்கள்ல இருக்க மலைகள்ல தான் உங்கள கூட்டிட்டு போவாங்க..
தகுதி என்ன?
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த மலையேற்றத்திற்கு தாராளமாக முன்பதிவு செய்யலாம். இதுவே, 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், (trekking) செல்ல விரும்புவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் கடிதம் தேவைப்படும்..
ஒரு வேலை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருந்தா, அவர்கள் எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பாங்க. அத்துடன் மலையேற்றம் செல்லும்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கட்டாயம் போகனும்..
சரி எல்லாமே நா சொல்லிட்டேன், இப்போ எப்படி register பன்னனும்ன்னு கேட்டீங்கன்ன www.trektamilnadu.com என்ற website ல போய் விண்ணப்பிச்சிக்கோங்க…