விஜய் தனது 51வது பிறந்தநாளை ஜூன் 22, 2025 அன்று கொண்டாடுகிறார்.
அனைத்து வருடமும் விஜய் அவர்களின் பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
அந்தவகையில் இந்த வருடம் விஜய் அவர்களுடைய பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சட்டமன்றத் தொகுதி மூலக்கடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின்பிறந்த நாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த் Ex.MLA அவர்களின் முன்னிலையில், மாவட்ட கழக செயலாளர் எம். எல். பிரபு தலைமையில், மாவட்ட கழக துணை செயலாளர் புழல் G. பாலாஜி ஏற்பாட்டில், ஏழை எளிய மக்களுக்கு 10 தள்ளுவண்டிகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் மாவட்ட ஒன்றிய பகுதி நிர்வாகிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
விஜய் அவர்களின் வார்த்தைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய், தனது 69வது படமான “ஜன நாயகன்” படத்திற்குப் பிறகு, முழு நேர அரசியலுக்குச் செல்லப் போவதாகவும், திரைப்படங்களில் இருந்து விலகிமக்கள் சேவை செய்யப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர், தனது 69வது படம் தான் தனது கடைசிப் படமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு இதுவே தனது கடைசி பயணம் என்று விஜய் அறிவித்ததால், படம் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது .
கடந்த ஆண்டு தொடக்கத்தில், விஜய் அரசியலில் இறங்கி தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்குவதாக அறிவித்தார் . “ஊழல்” மற்றும் “பிரிவினை” அரசியலுக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தேர்தல் களத்தில் இறங்கும் என்று
அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.