கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப் பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக விசிக பிரமுகர் மீது நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகள்,பொதுமக்கள் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே அழகப்பபுரத்தில் தனியார் ஜெப கூடாரம் இயங்கிவருகிறது.இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விசிக பிரமுகர் முத்துக்குமார் தொடர்ந்து டிரஸ்ட்டின் சமூக சேவை மற்றும் இறைப்பணிகளுக்குத் தொடர் இடையூறுகளை விளைவித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சட்டவிரோதமாகப் பணம் பறிக்கவும் திட்டமிட்டு, சில நபர்களின் துணையோடு அவர் தொடர் மிரட்டல்களை விடுத்து வருகிறார் என சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முத்துக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் உள்ளபோதிலும், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகத் தனது சொந்த சுயலாபத்திற்காகவும், கட்டப்பஞ்சாயத்து மூலமாகப் பணம் பறிப்பதற்காகவுமே செயல்பட்டு வருகிறார்.தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் முத்துக்குமார் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

















