காலியாக உள்ள மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தேர்தலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராகும் போலீஸ்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.வாக இருந்த மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணைந்ததால் இத்தொகுதி காலியானது. இதைத் தொடர்ந்து தாராபுரம் தொகுதியுடன் சேர்த்து மதுராந்தகம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தீவிர படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முன்கூட்டியே போலீஸ் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியேறி உள்ளன

















