August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மஹாகாலேஸ்வர் கோவில்

by Satheesa
September 19, 2025
in Bakthi
A A
0
மஹாகாலேஸ்வர் கோவில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

முத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜியினி மாவட்டத்தில் மகாகாலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று, அம்மனின் சக்தி பீடங்களில் 51வது மகோக்பலா சக்தி பீடம் ஆகும்.

ஒரு தடவை பூஜித்த பொருள்களை நிர்மால்யம் என்பார்கள். நிர்மால்யத்தைக் களைந்து புதிததாக அலங்கரிப்பது மரபு. ஆனால், இந்த வழக்கத்தை இந்த ஜோதிர்லிங்கத்தைப் பொறுத்தவரை அனு~;டப்பதில்லை. பிரசாதத்தையும், வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. மகாகாளவனம் என்று இந்தத் தலத்தை ஸ்கந்தபுராணம் கூறுகிறது. சிப்ரா நதி, புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது.

இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி, காளி தரிசனம் செய்தால், கல்வியும் அறிவும் பெருகும், அசுர குணம் மறையும் என்பது அனுபவ உண்மை.
உஜ்ஜயினியை உத்ூஜைன ஸ்ரீ ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள். மாமன்னர் விக்ரமாதித்தன் அரசாண்டு வெற்றியை தந்த மாநகர். தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும்.

உஜ்ஜயினி பல காலமாகப் பிரசித்தி பெற்ற தலம். பல மன்னர்கள் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. எனவே உஜ்ஜயினிக்கு வருடம் முழுவதும் யாத்திரை செல்லலாம்.

உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம். புராண காலம், சரித்திர காலம், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் காலம் ஆகிய கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் கும்பமேளா விழா கொண்டாடப்படும் புனிதத் தலம். கிரு~;ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள்.

கிருஸ்ணர் இங்கே வானசாத்திரம் கற்றதாகவும் கூறுகின்றனர். முன்னொரு காலத்தில் அசுரர்களும், வேதாளங்களும் நிறைந்திருந்தமையால், பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே சதா எழுந்தருள வேண்டியது ஆகிவிட்டது.

முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும், விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது. இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் ஆகிய மதத்தினரின் முக்கிய யாத்திரை தலமாகும்.

தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு சிறந்த புனிதத் தலமாகும். அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பேசப்படுகிறது.

பாணினி, பெரிபுளூசு, ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி, காளிதாசன், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள்.

திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத்தலம் உஜ்ஜயினி ஆகும். மகாபார்த் காலத்தில் அவந்தி இளவரசர்கள், கவுரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப்போரில் யுத்தம் புரிந்தனர் என்றும் கூறப்படுகிறது.

உஜ்ஜயினியில் சித்திவடம் என்ற அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. அது பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. அக்கினித் தீர்த்தமெனும் புனித சிப்ராநதி தீர்த்தம் நல்ல முறையில் வைத்துள்ளார்கள். இங்கே இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால், ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிவத்தலம். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி என்கின்றனர். பட்டி, விக்கிரமாதித்தர் ஆகியோர் காளியிடம் வரம் பெற்று சாகசங்கள் பல புரிந்து ஆட்சி செய்த தலம். விக்கிரமாதித்த ராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.
இத்தலத்தில் விநாயகர், ஓங்காரேசுவரர், தாரகேசுவரர், பார்வதி தேவி, சுப்ரமணியர், நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

ஏழு மோட்ச நகரங்களில் உஜ்ஜைனியும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை என்பன அவை. சுதன்வா என்ற ஜைன அரசன்தான், அவந்திகை என்ற இந்த நகரத்துக்கு உஜ்ஜைனி என்று பெயரிட்டான். கார்த்திகை மாதப் பவுர்ணமி இங்கே சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது.

இந்த நகரத்தின் அருகில், ரிணமுக் தேசுவரர், மங்களேசுவரர், பராகணபதி கோயில், கண்ணனின் குருவான ஸாந்தீபனி முனிவரின் ஆசிரமம், பர்த்ருஹரியின் குகை முதலியன காண வேண்டிய முக்கிய இடங்கள். சிப்ரா நதிக்கரை இயற்கை எழில் மிகுந்தது. ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான்.

சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூ~;ணன் என்ற அரக்கன், இந்த நகரைச் சூறையாடி, மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது, அந்த அரக்கன் வந்து, பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து, சிவலிங்கத்தையும் அழித்தான்.

அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி, தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள், மகாகாளரை அங்கேயே தங்கி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மகாகாளர் லிங்க உருவில் ஆவிர்ப்பவித்தார்.

தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு, அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார்.
அந்தப் பெண்ணைக் கம்ஸன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி விட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. விக்கிரமாதித்திய மன்னனும், பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான், பல வருடங்கள் ஆட்சி புரிந்து பல சாகசங்கள் செய்ததாகக் கூறப்படுகின்றன.

இந்த மகா காளிக்கு ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயருக்கு ஒரு புராணக்கதை கூறுகின்றனர். ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் வெகு உல்லாசமாகக் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன், பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர். வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர், முனிவர், மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர்.

Tags: jothilingammahakaleshwar-templesiven templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேலூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Next Post

விடைபெற்றார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்

Related Posts

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 
Bakthi

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

August 8, 2026
திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
Bakthi

திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
Next Post
விடைபெற்றார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்

விடைபெற்றார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.