மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :-
மயிலாடுதுறையில் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பொன்நக்கீரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 150 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தேசிய பணமயமாக்கல் கொள்கை 2.0 என்ற பெயரில் பொது சொத்துக்களை குத்தகைக்கு விடக்கூடாது, மின்சார சட்ட திருத்தம், விதை சட்ட திருத்தம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என மத்திய அரசையும், எண்ணூர் அனல் மின் நிலைய நிலைய விரிவாக்கத்தை தாரை வார்க்கக் கூடாது, ஸ்மார்ட் மீட்டர் என்ற பெயரால் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, 200 மாணவர் விடுதிகளை தனியாரிடம் விடக்கூடாது, சேலம் குடிநீர் திட்டத்தை தனியாரிடமிருந்து திரும்ப பெற வேண்டும், டிஎன்சிஎஸ்சி நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களின் அலுவலக செலவினங்களை மாநில அரசே ஏற்று நடத்திட வேண்டும், மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்திட வேண்டும் என தமிழக அரசையும் வலியுறுத்தி பேசி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.













