சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆவணங்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அருள்பிரியா தலைமையிலான போலீசார் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர்
அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகள் ,ஊழியர்கள் செல்போன் G pay ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்ததுடன், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையால் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது













