சென்னை மாணவர்களுக்கு ஜப்பான் மொழி பாடம் எடுத்த ஜப்பான் துணை தூதர்
ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
சென்னை அம்பத்தூர் புதூரில் உள்ள சேது பாஸ்கரா பள்ளியில் ஜப்பான் மொழி படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னைக்கான ஜப்பான் துணைத் தூதர் முனியோ தகாஷி கலந்துகொண்டு ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்ற 45 பள்ளி மாணவர்கள், 46 கல்லூரி மாணவர்கள் என 91 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக ஜப்பான் மொழி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்த ஜப்பான் துணை தூதர் மாணவர்களுக்கு ஜப்பான் மொழியில் பாடம் எடுத்தார். மாணவர்களும் ஜப்பான் மொழியில் துணை தூதர் கேட்ட கேள்விகளுக்கு ஜப்பான் மொழியில் பதில் அளித்தனர்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு ஜப்பான் மொழி இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ணு இதுவரை 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்று ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மேற்படிப்பை படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சேது குமணன், தலைமை ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

















