பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறையை, தங்களது சொந்த உடல்நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் .மாவட்ட ஆட்சித் தலைவர் லீலா அலெக்ஸ் பேச்சு.
வேலூரில் இன்று அரசு பெண் ஊழியர்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் லீலா அலெக்ஸ் துவக்கி வைத்தார்.பின்னர் நடைபெற்ற பொது சுகாதாரம் மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்,செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் இந்திரநாத்,பாண்டியன்,வத்சலா, உள்ளிட்டோரும் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஏராளமான பெண் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுஉடல் பரிசோதனை செய்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் லீலா அலெக்ஸ் ,நம் சமூகத்தில் பெண்கள் தங்களது குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறையை, தங்களது சொந்த உடல்நலனிலும் காட்ட வேண்டும் .நமது சமுதாயத்தில் பல பெண்மணிகள் முறையான வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் வருடாந்திர செக்கப்புகளையும் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு பெண்மணியும் இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, பெண்களிடையே அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய் போன்ற தீவிர நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அதனை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம் .நோயை முந்தைய நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், தேவையற்ற மன உளைச்சல் மற்றும் உடல்ரீதியான கடுமையான இன்னல்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும்பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் சிறந்த முறையில் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால், சக பெண் பணியாளர்கள் மற்றும் நண்பர்களையும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் பேசினார்

















