தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்..”
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது..
என்ன போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்..
சங்கத்தின் மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை நடைபெற்ற இந்த போராட்டத்தில்... "தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்... அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் முறையான ஊதியம்,TAPS உள்ளிட்ட பலன்கள் வழங்க வேண்டும்... வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊர் புற நூலகர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கான அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும்..."உள்ளிட்ட 45 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது..
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும்,..இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்..
முன்னதாக ஓய்வு பற்றஅ ரசு ஊழியர் சங்கத்தினர் கோஷங்களுடன் ஊர்வலமாக வந்து போராட்டத்தை துவக்கி வைத்தனர்..
பேட்டி: செங்குட்டுவன்,
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவாரூர் மாவட்டம்.

















