பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 34 வணிக கட்டிடங்கள்,3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் சித்தேரி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.இதன் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வருவாய் துறைக்கு உத்தரவு அளித்திருந்தது. உத்தரவை நடைமுறை படுத்தாமல் இருந்து வந்ததாக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது வருவாய் துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதனைந்தொடர்ந்து ஆவடி வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் வணிக கட்டிடங்கள் இடிக்கும் பணியில் 5 ஜேசிபி இயந்திரங்களுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் குவிந்தனர்.இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றம் சமயத்தில் மக்கள் போராட்டம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று முன்கூட்டியே பாதுகாப்பு பணிக்காக 100கும் மேற்பட்ட போலீசார் பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் கண்ணன் அவர்கள் தலைமையில், பட்டாபிராம் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து jcb இயந்திரங்கள் மூலம் சுமார் 5 கோடி மதிப்பிலான 34வணிக கட்டிடங்கள்,3 வீடுகள் இடிக்கப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது.தங்கள் கடைகள்,வீடுகள் இடிக்கப்பட்டது கண்டு அதன் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்
இதனிடையே மேலும் ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கபட உள்ளதாகவும்,அதற்குமுன் குறிப்பிட்ட இடத்தினை மக்கள் காலி செய்திட வேண்டும் எனவும் வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீண்ட தலைமுறைகளாக வசித்து வருவதால் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் அரசு தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















