ஜூன் 5-ல் வெளியாகும் தனது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும், திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின்போது உயர் நீதிமன்றம் கமல்ஹாசனை சாடியுள்ளது. அப்போது பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி, “இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது.
. நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள் நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?
கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள். கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக் கேளுங்கள், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்” என்று தெரிவித்தார்.