பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நீடிக்கும் உரிமை போருக்கு மத்தியில் இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும் அன்புமணி சேர்ப்பதுமாக கட்சியில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தைலாபுரம் இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைப்பெற்ற ஆலோசனையில் பேட்டி அளித்த வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவும் பிரச்சனையில் சமாதானத்துக்கு வழியில்லை.
ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானத்துக்கு வழியில்லை. ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதாக பு.தா.அருள்மொழி தகவல் தெரிவித்துள்ளார். தந்தை, மகன் இடையே பிரச்சனை நிலவுவதால் எங்களால் சமரசம் செய்ய இயலவில்லை. அன்புமணி எப்போது வேண்டுமானாலும் தைலாபுரம் வந்து ராமதாஸை சந்திக்கலாம்.