பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் அடுத்த மேல் சித்ரால் பகுதியைச் சேர்ந்த 17 வயது டிக்டாக் பிரபலமான சனா யூசுஃபை, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பின்தொடர்கின்றனர். இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் சென்றார்.
அவருடன் சிறிது நேரம் பேசிய அந்த நபர், திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சனா யூசுஃபை சுட்டுக் கொன்றார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த போலீசார் சனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், டிஜிட்டல் தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்து, கொலைக்கான நோக்கத்தை விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம், கவுரவக் கொலையாக இருக்கலாம் என்று தெரிகிறது.