நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் துவக்கம் முதல் மேலே உள்ள நார்வேயை சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் நேற்று மோதினார். போட்டியின் துவக்கத்தில் வலுவான நிலையில் இருந்த கார்ல்சனின் பிடி, போகப் போக நழுவத் துவங்கியது.
கடைசியில் போட்டியின் திசை மாறி, குகேஷ் அபார வெற்றி பெற்று கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்தார். நம்ப முடியாத அந்த வெற்றியால் குகேஷ் இருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளை உற்சாகமாக ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.