ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு, காவிரிக்கரை படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில், புகழ்பெற்ற வெற்றி வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது தொடர்ந்து, பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலி அலங்காரம் செய்து வழிபாடு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு :-
வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆன ஆஷாட நவராத்திரி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில் வெற்றி வராகி அம்மனுக்கு, இறுதி நாளான இன்று அம்மனுக்கு பால் பன்னீர் மஞ்சள் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.














