திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா
திருக்கடையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மேலாண்மை குழுவினர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் சங்கத்தினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 1 லட்சம் மதிப்பில் 25 ஃபேன் மின் விசிறிகள் மற்றும், 50 நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும்விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கலா ராணி தலைமை தாங்கினார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில் நம்பி ஆகியோர் முன்னிலவைத்தனர், இதில் கணேச குருக்கள், சண்முகசுந்தர குருக்கள், கல்யாண குருக்கள், ராஜா குருக்கள், விக்னேஷ் குருக்கள், ராஜேஷ் குருக்கள் உள்ளிட்ட குறுக்கல்கள் பள்ளி வளர்ச்சிக்காக பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் ஃபேன், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.














