நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி – 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாகப்பட்டினத்தில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “We The Leaders” அமைப்பு சார்பில் “போதை இல்லா நாகப்பட்டினம்” என்ற முழக்கத்துடன் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
“மாறுவோம் மாற்றுவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணி நாகை ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில் இருந்து துவங்கியது. பேரணியை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரமணன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து “போதை ஒழிக, இளைஞர்களை காப்போம்” என கோஷங்களை எழுப்பியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் நடைபயணமாக சென்று தம்பிதுரை பூங்கா, மணிக்கூண்டு அருகில் நிறைவு பெற்றது.
நிறைவு நிகழ்சியில் மதுபோதை சிறப்பு நிபுணர் ஷேக் அலாவுதீன் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபடும் வழிகள் குறித்து உரையாற்றினர்.
பேரணிக்கு ஆறுமுகம், ராஜேஷ், குணாளன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி, தட்சணாமூர்த்தி, மாரீஈஸ்வரன், சிந்துஜா, மணிகண்டபிரகாஷ், சக்திராஜ், முத்துக்குமார் முத்துக்குமரன் சேகர்,சரவணன்வேல், அசோக், மணிகண்டன் உள்ளிட்ட வீ தி லீடர் குழுவினர் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்று போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.













