மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து படையல் இட்டு ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என முடக்கமிட்டு கொண்டாட்டம்.
கிருஷ்ண ஜெயந்தி விழா என்பது இந்துக்களால் கொண்டாடப்பட்டவரும் தமிழ் மாதம் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்துவரும் நன்னாளில் இது வருகிறது.ஆங்கில நாட்காட்டியின்படி பொதுவாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வருகிறது. மயிலாடுதுறையில் கூறைநாடு, இடத்தெரு, மேல ஒத்த சரக்கு தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணனை வீட்டுக்கு அழைப்பதற்கு வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவு கொண்டு கிருஷ்ணரின் சிறிய பாதங்களை வரைந்து வரவேற்று கிருஷ்ணருக்குப் பிடித்தமான சீடை, முறுக்கு, வெண்ணெய் மற்றும் அவல் போன்றவற்றை நைவேயமாகப் படையல் இட்டு பூஜைகள் செய்து மக்கள் வழிபட்டனர். மேலும் சிறுவர் சிறுமிகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடமடைந்து அவர்களை கிருஷ்ணனாக பாவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர்.














