மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா:- உற்சவர் கிருஷ்ணரை தொட்டியில் எழுந்தருளச் செய்து தொட்டிலை ஆட்டி பக்தர்கள் வழிபாடு:-
மயிலாடுதுறை ரயிலடி மேலஒத்தசரகு தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயமான ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீகாளிங்க நர்த்தன வடிவில் உள்ள கிருஷ்ணன் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், மற்றும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தது பக்தர்களை கவர்ந்தது. குழந்தை கிருஷ்ணன் மலர் தொட்டியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை கிருஷ்ணர் மலர் தொட்டிலில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் தொட்டிலை ஆட்டி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.














