சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் திமுகவினர் விழுப்புரம் காந்தி சிலையை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்ய முயன்ற போது காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உட்பட நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அரை மணி நேரம் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

















