அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!
கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், அரசியல் நாகரிகத்தையும் தனிமனித மரியாதையையும் மீறும் வகையிலான பேச்சுகளை ஒருபோதும் ஏற்க முடியாது.
அரசியலில் கருத்துகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால், தனிநபர்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கின்றன.
பொதுவெளியில் பேசும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும்.
நாகரிகமான அரசியலே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
- முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் .விஜய தரணி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி

















