வேலூர் மாவட்டத்திலே முதல் முறையாக 90 அடி உயரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜ அலங்காரத்தில் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கெங்கநல்லூர் ஊராட்சி மூலைகேட் அருகே மலைமேல் வேலாடும் தணிகைமலை பாலமுருகன் கோயில் உள்ளது.இக்கோயிலில் முதல் முறையாக ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்டமான முறையில் ராஜ அலங்காரத்தில் முருகர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா கோயிலில் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்,.பாபு தலைமையில் நடைபெற்றதுபின்னர் கோயில் முன்பாக முருகர் சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி யாகம் வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி அதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். வேலூர் மாவட்டத்திலே முதல் முறையாக 90 அடி உயரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இக்கோயிலில் பிரம்மாண்டமான முறையில் ராஜ அலங்காரத்தில் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,







