காட்பாடியில் மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார் – அப்துல்கலாம் நியூட்டனை போல் கேள்வி கேளுங்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிப்புகள் உருவாகும் என மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேச்சு
வேலூர்மாவட்டம்,காட்பாடி சிருஷ்டி பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா மற்றும் திரளான பள்ளி மாணவ,மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர் மேலும் ஒரு நாள் கூட பள்ளிகளுக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ,மாணவிகளை பாராட்டி பேட்ஜ் சான்றிதழையும் ஆட்சியர் வழங்கினார்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேசுகையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னதை போல் கணவு காணுங்கள் புதிய கண்டுபிடிப்புகள் முதலில் தோல்வியுற்றாலும் இறுதியில் வெற்றியடையும் ஆகவே முயற்சி செய்யுங்கள் மேலும் நியூட்டனை போல் அப்துல் கலாமை போல கேள்வி கேளுங்கள் அப்போது தான் நீங்களும் சாதிக்க முடியும் என பேசினார்
பின்னர் மாணவர்களின் கண்டுபிடிப்புகளான காலநிலையை அறிந்து சொல்லும் ரோபோ மற்றும் ஆற்று மணல் பாதுகாப்புமணல் கொள்ளை தடுத்தல், சுற்றுசூழலை பாதுகாக்கும் கருவி ,தானியங்கி தீ தடுப்பு கருவி, தட்ப வெட்ப நிலை கண்டறியும் தானியங்கி கருவி ,காற்றாலை மின்சாரம்,குப்பைகள் மறுசுழற்சி , ,சோலார் மின் உற்பத்தி ,கண்ணாடியில் மைக்ரோ ஸ்கோப் போன்ற மாணவ,மாணவிகளின் அரிய கண்டுபிடிப்புகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது இதனை ஆட்சியர் உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்







