கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி குவியும் பாராட்டுக்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் அகஸ்டின் ராஜா.
இவரது மகள் அபினா ஷெரின் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.
அபினா ஷெரினுக்கு தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். இவர் ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்போது 9-வது புத்தகத்தையும் எழுதி வருகிறார்.
இவர் 12-ம் வகுப்பில்படிக்கும் போது இவரது மனநிலையில் ஒரு சிறிய மாற்றத்தை உணர்ந்திருக்கிறார்.
தனியாக இருக்கும் பொழுது தனது எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாததால்
மனதில் தோன்றிய எண்ணங் களையும் அனுபவங்களையும் கவிதைகளாக எழுத தொடங்கியிருக்கிறார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போது சிறு சிறு கவிதைகளை எழுதியிருக்கிறார். மேலும் கல்லூரி நிகழ்ச்சிகளில் கவிதைகள் எழுத தொடங்கி னார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் பாண்டே இவரது கவிதையை பார்த்து ஏன் நீங்கள் ஒரு புத்தகமாக எழுதக் கூடாதா?
என்று கேட்டு இவருக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தினார்.
அன்று முதல் இவரது மனதில் புத்தகம் எழுத வேண்டும் என்று நம்பிக்கையை கொடுத்தது.
அதைத்
இவர் எழுதிய புத்தகத்தில் இவரின் பெயர் முதன்முதலில் வந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்,
இவரது முதல் ஆங்கிலபுத்தகம் ‘லைப் கோஸ் ஆன்” என்ற புத்தகத்துக்காக இவரை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்
இதை தொடர்ந்து What’s Next?, We Are Home, Le Chant des Instants Perdus, Love in the Olive Green,
We Became Home,
Girl Dancing Under Golden Spotlight, She Was Always Enough.
என எட்டு புத்தகங்களை எழுதி உள்ளார்,
புத்தகம் எழுத நேரத்தை ஒதுக்கி எழுதி வந்திருக்கிறார்.
இவர் எழுதிய புத்தகத்தில் முக்கியமான தொகுப்பாக மாற்றத்தை ஏற்றுக்கொள்வது, சவால்களை எதிர்கொள்வது, நினைவுகளுக்கு அர்த்தம் காண்பது மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தருணங்களையும் கடந்து முன்னேறுவது போன்றவை முக்கியமான தொகுப்பாகும்.
இவர் எழுதிய புத்தகத்தில் ராணுவ வீரர்களின் தியாகம், அன்பு,பிரிவு, க டமை, துணிவு, மற்றும்.மன உறுதி குடும்ப சூழ்நிலைகளை பதிவு செய்துள்ளார்
இவருக்கு கோல்டன் என் லீடர்டெயின் மென்ட் விருது, பாகை விருது, சிறந்த விருது, இளம் எழுத்தாளர் எழுத்தாளர் விருது.கவி நிலவு இணைய வானொலியின் சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு அரசின் தொழில் கல்வி நிறுவனத்தின் சிறந்த எழுத்தாளர் விருது போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன
இந்த விருது அனைத்தும் இவரின் படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் இனிவரும் காலங்களில் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்
இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பேட்டி: அபினா ஷெரின் (இளம்எழுத்தாளர்)







