திருவள்ளூர் அருகே
அரசுக்கு சொந்தமான நிலத்தில்
கர்ம வீரர் கல்வித்தந்தை காமராஜர், அவர்களால்
அடிக்கல் நாட்டி வைத்து கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளின், இடத்தை
தனிநபர் ஒருவர் தமக்கு சொந்தமான நிலம் என அதனை
ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம், தலைமையில் ஊர் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த பாக்கம், பேருந்து நிலையம் அருகே
1960- ஆம் ஆண்டு அதே பகுதியை சார்ந்த அண்ணாமலை என்பவர் ரூபாய் 100 பெற்றுக்கொண்டு கிரையம்
பத்திரம் மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 சென்ட் நிலம் எழுதி கொடுத்துள்ளனர்,
அதனுடன் அரசு நிளமான, தோப்பு புறம்போக்கு 25 சென்ட் நிலத்தையும் சேர்த்து சுமார் 35 சென்ட் நிலத்தில்
அப்பகுதி பொதுமக்களின் பயன்பெறும் விதமாக அந்த இடத்தில்
ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி கட்டிடம், லைப்ரரி
முத்துமாரியம்மன் ஆலயம்,
கட்டப்பட்டுள்ளன,
மேலும்
முக்கிய குறிப்பாக
கர்ம வீரர் கல்வித்தந்தை காமராஜ், அவர்கள் அந்த இடத்தில்
1963, ஆண்டு ஒன்றிய தொடக்கப் பள்ளியை அடிக்கல் நாட்டி துவங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,
அதுமட்டுமில்லாமல்
பாக்கம், அதனை சுற்றியுள்ள
பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்தப் பகுதியிலிருந்து தான்
நீர்மூழ்கி ஜெட் பம்பு, மோட்டர்கள் முலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்,
இந்நிலையில்
மூன்று தலைமுறைகளாக
அப்பகுதி மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வந்த இடத்தை சமீபகாலமாக
அதே பகுதி சார்ந்த அன்பழகன், என்பவர் இந்த இடத்தை எழுதிக் கொடுத்த அண்ணாமலை, என்பவரின் கொள்ளு பேரன் நான் தான் என்றும், அந்த
இடம் என் தாத்தாவுக்கு சொந்தமானது, அந்த இடத்திலிருந்து உடனடியாக எல்லாவற்றையும் காலி செய்ய வேண்டும், ஜேசிபி இயந்திர மூலமாக இடிக்கப் போவதாக மிரட்டல் விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,
இது தொடர்பாக
பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம், தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதாவிடம்,
மூன்று தலைமுறைகளாக பொதுமக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வந்த இடத்தை தனிநபர் ஒருவர் திடீர் என தமக்கு சொந்தமான நிலம் என சொல்லிக்கொண்டு அந்த இடத்தை
ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும்,
அதனைத் தடுக்க
வேண்டும் என
மாவட்ட ஆட்சியர் கவிதாவிடம், புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்,







