நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்: மோப்ப நாய் படை மூலம் காவல்துறையினர் தீவிர சோதனை:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படையினர் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காவல்துறையின் மோப்ப நாய் படையினர் களமிறக்கப்பட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பகுதிகள், பொருட்கள் ஆகியவற்றில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களைத் தடுப்பதில் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் இணைந்து மோப்ப நாய் படையின் உதவியுடன் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







