தரங்கம்பாடி சுற்றி உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்தது இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா சுற்று வட்டார பகுதிகளிலும் இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்தது இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது தற்பொழுது கடல் அலைகள் ஆக்ரோசத்துடன் உள்ளது இந்நிலையில் தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் கடல் அலைகள் ஆக்ரோஷம் காரணமாக கடல் அலைகள் வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை பாதுகாப்பு சுற்றுச்சுவரை மோதி செல்கிறது இதனால் சுற்றுச்சுவர் சேதமடையும் நிலை உள்ளது தரங்கம்பாடி வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுவற்றில் வந்து மோதும் கடல் அலைகள் கடல் சீற்றம், கடல் அலைகள் காரணமாக கடலில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என காவல்துறையினர் கடலோர பாதுகாப்பு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.







