வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழாவில் கடற்கரை மணலில் டேனிஷ் கோட்டை போன்று தத்துரூபமாக மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது பலர் பார்த்து ரசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் அகழ்வைப்பகத்தில் உள்ள புராதன வரலாற்று
சின்னங்கள் மற்றும் பண்டையகால சுவடுகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் உலக மரபு வார விழா கொண்டாடபடுவது வழக்கம். அதன்படி நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஓரு வாரம் உலக மரபு வார விழா நடைபெற்றது .இந்த 7 நாட்களும் பொதுமக்கள், மாணவர்கள்,சுற்றுலா பயணிகள் டேனிஷ் கோட்டையை கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் நவம்பர் 25 மரபு வார விழாவின் இறுதி நாளில் கோட்டையின் அருகில் கடற்கரை மணலில் டேனிஷ் கோட்டையின் வடிவத்தை மணலில் மணல் சிற்பமாக அமைத்தனர் தொல்லியல் துறை அலுவலர் வசந்த் இளநிலை பொறியாளர் அகிலன் ஆகியோர் அமைத்திருந்தனர் சுற்றுலா பயணிகள் மணல் சிற்பத்தை பார்த்து ரசித்தனர்.







