வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன் பட்டாகத்தியுடன் போலீசில் சரண் — போலீசார் விசாரணை
வேலூர்மாவட்டம் வேலூர் அடுத்தஅரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 30). சத்துவாச்சாரி பேஸ் 1 சவுத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் ஹரி பிரசாத். கார் டிரைவராக வேலை செய்துவருகிறார்.இருவரும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டது. நிலையில்கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரி பிரசாத் மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் கீர்த்திகா அரபாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சென்று தங்கி இருந்தார். கீர்த்திகாவின் தாய் விஜயா சத்துவாச்சாரி பேஸ்-2,ஆர்டிஓ சாலை பன்னிரண்டாவது தெருவில் உள்ள தெலுங்கு மேட்ரிமோனியில் வேலை செய்து வருகிறார். வீட்டில் இருந்தால் மகளை மருமகன் ஏதாவது செய்து விடுவார் என பயந்து தான் வேலை செய்யும் இடத்திற்கு மகளை இன்று அழைத்துச் சென்றார். இன்று ஹரி பிரசாத் தனது மனைவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று கேட்டார் தனது தாய் வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்தார். இது அடுத்து ஹரிபிரசாத் பட்டா கத்தி எடுத்துக்கொண்டு விஜயா வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் கீர்த்திகாவுக்கு இரண்டு கை மணிக்கட்டுகள் துண்டாகி கழுத்து மற்றும் முகம் தாடை ஆகிய பகுதியில் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தடுத்து நிறுத்தம் என்றால் அப்போது அவரையும் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது.இதை அடுத்து ஹரி பிரசாத் பட்டா கத்தியுடன் சாவகாசமாக வீட்டிற்கு வெளியே வந்து பைக்கில் ஏரி சென்று சத்துவாச்சாரி போலீசில் சரணடைந்தார்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கீர்த்திகாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
பட்டப்பகலில் காதல் மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் சத்துவாச்சாரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







