பேரணாம்பட்டில் அடிப்படை வசதிகள் மற்றும் குடி தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட அத்திப்பள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த நிலையில இந்தப் பகுதியில் முறையாக குடி தண்ணீர் வழங்க கோரியும் சாலை வசதி தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி பலமுறை நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேர்ந்து பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு போலீசார் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி துறையினர் இந்தப் பகுதிக்கு தேவையான சாலை வசதி தெரு விளக்கு மற்றும் குடி தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர் பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தராதது கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

















