பேர்ணாம்பட்டி சம்பள உயர்வு மற்றும் போனஸ் தொகையை வழங்க கோரி தனியார் காலனி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கொண்டம்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இந்தியா ஷூஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்கிற காலனி தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில் 200கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்இந்த நிலையில் காலனி தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி தரக் கோரியும் போனஸ் தொகையை வழங்குமாறு தொடர்ந்து கம்பெனி நிர்வாகத்திடம் தொழிலாளிகள் கேட்டு எந்த பயனும் இல்லாததால்
50க்கும் மேற்பட்ட பின் தொழிலாளிகள் காலனி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்தகவல் அறிந்து வந்த போலீசார் கம்பெனி நிர்வாகத்திடம் பேசி சம்பள உயர்வு மற்றும் போனஸ் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பெயரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது

















