மனைவியின் புகாரில் போலீஸ் டி.எஸ்.பி. கைதுமனைவி அளித்த வன்கொடுமை புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி ஜாபர் சித்திக், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு
வேலூர் மத்திய சிறையில் அடைப்பு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதுடன், தன்னை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக ஜாபர் சித்திக் மீது அவரது காதல் மனைவி, ஷோபனா டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரை அடுத்து நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டிஸ்பி ஆக பணியாற்றி வந்தவர் ஜாபர் சித்திக் அவருடைய காதல் மனைவி ஷோபனாஅரக்கோணத்தில் இருந்து பணியிட மாறுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட டிஎஸ்பி ஆக கடந்த 4.7.2026 அன்று பதவி ஏற்றுக்கொண்டார் இந்த நிலையில்டி.எஸ்.பி ஜாபர் சித்திக்கின் மனைவி ஷோபனா, தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகவும் காவல்துறை தலைமை இயக்குநரிடம் 4.8.2026 அன்று (டிஜிபியிடம்), புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்துவேலுார் குற்ற பிரிவு குற்ற புலனாய்வுதுறை குற்ற எண் 02/2026 யு/எஸ் 85,115(2) 351(2) , ஆர்/ட்பள்யூ 3 (1),(ஆர்), 3(1) (s) 3(2) வி.எ) எஸ்/சி,எஸ்,டி வழக்கு செய்யப்பட்டதின் அடிப்படையில் 21.08.26 தேதி வேலூர் சி.பி.சி.ஐடி போலீசார் பரமக்குடி டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி இடம் விசாரணை செய்தும் அலுவலகத்தை சோதனை செய்தனர்பின்னர் ஜாபர் சித்திக் தமிழக உள்துறை செயலாளரால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இரவு வேலூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வர வழைக்கப்பட்ட ஜாபர் சித்திக்கிடம் இரவு முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுபின்னர் ஜாபர் சித்திக் கைது செய்யப்பட்டு வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்















