விழுப்புரத்தில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா
விழுப்புரம்:
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களாகப் போற்றப்படும் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் அகமுடையார் அகில இந்திய மகாசபை சார்பில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மற்றும் விழுப்புரம் மாவட்ட அகமுடையார் ஒற்றுமை சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகவேல், மாவட்டப் பொருளாளர் பிரேம்ராஜன், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், சக்திவேல், அருண்குமார், சதீஷ், ரவி, ஆர்.எஸ்.எஸ். அப்புஜீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருதுபாண்டியர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

















