குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இலவுவிளை உள்ள மார்எப் ரேம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணக்கொண்டாட்டம். செயற்கை யானை மீதும் ஒட்டகம் மீதும் செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் உலா வந்த மாவேலி மன்னன்.
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் கேரளாவை ஒட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் ஓணகொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக மார்த்தாண்டம் இலவுவிளை பகுதியில் உள்ள மார்எப்ரோம் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓண விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகள் கேரள கலாச்சார ஆடையணிந்து செயற்கை யானை மற்றும் ஒட்டகம் மீது மாவேலி மன்னனை அமரச்செய்து செண்டை மேளம் பூக்காவடி கேரள பாரம்பரிய களரிபயிற்று தைய்யம், கதகளி, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பானை உடைத்தல் வடம் இழுத்தல் திருவாதிரை நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார்













