சீர்காழி அருகே பரபரப்பு: பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உட்பட 7 பேரை மீது கதண்டு வண்டுகள் தாக்குதல் – அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சீர்காழி தாலுக்கா வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இன்று வழக்கம்போல் சீர்காழி கோயில்பத்து பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களில் சீர்காழிக்கு சென்று கொண்டிருந்தனர்
அப்போது, ஊமமதகு என்ற பகுதியில் உள்ள புளியமரத்தில் அமைந்திருந்த கதண்டு வண்டுகளின் கூடு எதிர்பாராதவிதமாக கலைந்து, அவ்வழியாகச் சென்ற மாணவர்கள் பொதுமக்கள் மீது கதண்டுகள் சீறிப் பாய்ந்து கொட்டின.
கதண்டு வண்டுகள் கடித்ததில் கடும் வலியாலும், அலர்ஜியாலும் துடித்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆதமங்கலம் பகுதியை சேர்ந்த ஆதேஷ் (13 ) வள்ளுவக்குடி பகுதியை சேர்ந்த தரனேஷ் (12) அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீஹரி (15) பாலகுமார் (44) கலையரசன் (48) உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

















